How To Delete Facebook Account Permanently
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் நீங்கள் அனைவரும் பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருப்பீர்கள். அதில் ஒரு சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட பேஸ்புக் கணக்கு வைத்திருப்பார்கள். அவ்வாறு இருக்கையில் அவருக்கு பழைய பேஸ்புக் அக்கவுண்ட் தேவையில்லாமல் இருக்கலாம். அப்படி தேவையில்லாமல் இருக்கும் பொழுது அந்த பேஸ்புக் அக்கவுண்டை அவர் அளிக்க வேண்டும் என்று நினைப்பார். அப்படி நினைக்கும் போது அதை எப்படி டெலிட் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியாமல் இருக்கலாம். அப்படி தெரியாமல் இருப்பவர்கள் இந்த பதிவை முழுமையாக படியுங்கள். இந்த பதிவு உங்களுக்கு தேவையில்லாத பேஸ்புக் அக்கவுண்டை எப்படி நிரந்தரமாக டெலிட் செய்வது என்பதை பற்றி முழு விவரங்கள் கொடுத்துள்ளேன்.
சரி வாங்க இப்ப எப்படி டெலிட் பண்ணலாம் என்று பார்க்கலாம். முதலில் பேஸ்புக் அக்கவுண்டை டெலிட் செய்வதற்கு நீங்கள் உங்களது பிரவுசரில் உங்களது டெலீட் செய்ய வேண்டிய அக்கௌன்ட்டை லாகின் செய்ய வேண்டும். லாகின் செய்து வைத்துக் கொண்டு மற்றொரு டேப் ஓபன் செய்து அதில் நான் இந்த பதிவின் கீழ் ஒரு பட்டன் வடிவேல் லிங்க் கொடுத்துள்ளேன். அந்த லிங்க் ஐ ஓபன் செய்யவும். அந்த அறிக்கை ஓபன் செய்த பின்னர் உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட் டெலிட் செய்யலாமா என்று உறுதிப்படுத்துவதற்காக கேட்கப்படும். அதில் நீங்கள் டெலீட் செய்வதற்கான ஆப்ஷனை தேர்வு எடுத்து டெலீட் பட்டனை கிளிக் செய்தால் போதும். உங்களது அக்கௌண்ட் டெலிட் செய்வதற்கான வேலை நடைபெறும்.
உங்களது அக்கௌண்ட் நீங்கள் டெலீட் செய்த பின்னர் 90 நாட்களுக்கு அந்த அக்கவுண்டை நீங்கள் லாகின் செய்ய கூடாது. அவ்வாறு லாகின் செய்யாமல் இருந்தால் உங்களது அக்கௌண்ட் நிரந்தரமாக டெலிட் செய்யப்படும். உங்களது அக்கௌண்ட் டெலிட் ஆகுவதற்கு 90 நாட்கள் ஆகும். அதுவரை நீங்கள் காத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உங்கள் பேஸ்புக் அக்கவுண்டை நிரந்தரமாக நீங்கள் டெலிட் செய்ய முடியும். டெலிட் செய்வதற்கு தேவையான லிங்க் இந்த பதிவின் கீழ் கொடுத்துள்ளேன். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவ்வாறு பயனுள்ளதாக இருந்தால் மற்ற நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம்.
நன்றி!